About  Opening hours  Location   Image Gallery    Publications   Contacts  UPDATED ON 10/08/2012 (c) Web by:Bala Ravi 2012

 

ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

 

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம்

 

கொலிண்டேல் - லண்டன்

 

Tel: 0203 609 4313

 

OPENING HOURS: MON - SUN 8am to 2pm - 5pm to 9pm

POOJA TIME: 8.30am - 12pm - 7.30pm

ஒவ்வொரு முறை ராமா என்று சொல்லும் போதும் நாம் மேன்மை அடைகிறோம். எங்கெல்லாம் ராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வருகை தருவார். ஆசீர்வதிப்பார்.

 

ஸ்ரீ ராமனுக்காக தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணித்து கொண்டவர் எங்கள் ஆஞ்சநேயப் பெருமான் துணிவிலும் பணிவிலும் சிறந்தவர். ஸ்ரீ ராம பக்தியிலே உயர்ந்தவர் அன்பின் கடல் அறிவின் சுரங்கம் தன் நலம் கருதாத தனிப் பெரும் கருணை பொறுமையின் சிகரம் வீரத்தின் விளை நிலம் ஓரு முறை ஓம் ஸ்ரீ ராம ஜெயம் சொன்னாலே சகல செல்வங்களையும் அள்ளித் தருகின்ற வள்ளல். தன்னுடைய மார்பினைப் பிளந்து  ஸ்ரீராமனையும் அன்னை சீதா பிராட்டியையும் காண்பித்த தெய்வம்.

ஒவ் வொரு நாளும் தோய்ந்து விட்டு 108 முறைகள் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லி வந்தால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சர்வமங்களம் உண்டாகும் துஷ்ட சக்திகள் விலகி ஓடும். இது சத்தியம்.

 

ராம நாமத்தின் மகிமை !!!

 

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்?

 

அனுமன் பிறப்பு

 

ராமாயணம் கேட்க அனுமனும் வருவார்

 

ஆஞ்சநேயர் கவசம்

 

ஆஞ்சநேயர் ஸ்லோகம்

 

ஸ்ரீ ஹநுமான் சாலீஸா

 

அனுமன் வாலின் பெருமை

 

சுந்தரகாண்டம் எளிய வழியில்

 

பஞ்சமுகத்திற்கான காரணம்

 

இலங்கையில் ஆஞ்சநேயர் வழிபாடு

 

திருமண தடை,தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

 

ஆனந்தமங்கலம் ஆஞ்சனேயர் ஆலய வரவாறு

 

ஏகாதசி விரதத்தின் கதை

 

அனுமனுக்கு ஸ்ரீ நரசிம்மராக காட்சி தந்த ஸ்ரீ ராமர்

 

 

                                                                             உ

ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

 

ANJANEYAR ALAYAM (HANUMAN MANDIR)

HANUMAN COMMUITY CENTRE

Marquin Centre

Marsh  Drive
West  Hendon,  NW9 7QE

ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு வருவதற்கான பெரிய வரைபடத்தை பெற இங்கே அழுத்தவும்.

 

 

5.8.2012 ஞாயிறு அன்று வெற்றிலையால் அலங்கரிகப்பட்ட மூலவர் 

 

 

 

ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் லண்டன் விஜயம்

 

 

ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

 

ஸ்ரீ மத் சந்திரசேகர சுவாமிகள்  

 

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயத்தின்  வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு கொழும்பு தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் லண்டன்  ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஸ்தாபகருமான ஸ்ரீ மத் சந்திரசேகர ஆஞ்சநேய சுவாமிகள் 9.8.2012 அன்று லண்டனுக்கு வருகை தந்துதுள்ளார்.
தீராத நோய்களை எல்லாம் தீர்த்து  எத்தனையோ மாபெரும் அற்புதங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கும் சுவாமிகளின் ஆசிகளைப் பெற்று உங்கள் இன்னல்கள் தீரத் திரளாக வர வேண்டிக்கொள்ளுகின்றோம்.

ஸ்ரீ ராம ஜெயம்.

 

இந்தக் கலியுகத்தில்

ஆஞ்சநேயப் பெருமான் செய்த மகா அற்புதம்.

 

இந்தியாவிலே இருக்கின்ற ரத்தலம் என்ற ஊரிலே உள்ள
காளிகா மாதா கோவிலிலே நடந்த அற்புதம் இது.
மகான் ஒருவர் ஸ்ரீ ராமாயண சரித்திரத்தை உபன்யாசம் செய்து கொண்டிருக்கும் போது. ஆஞ்சநேயப் பெருமான் வெண்குரங்கு வடிவில் வந்து உருகி நின்று ஸ்ரீ ராமன் புகழை கேட்கின்ற காட்சியைப் பாருங்கள்.
எங்கெல்லாம் ஸ்ரீ ராமன் புகழ் பாடப் படுகின்றதோ அங்கெல்லாம்
ஆஞ்சநேயப் பெருமான் உருகி நின்று கேட்பார் என்பதற்கு இதைவிட
ஆதாரம் வேண்டுமா?

 

மேலும் தெரிந்து கொள்ள.........

 


 

 

 

நேரில் தரிசனம் தந்த ஸ்ரீ ராம , லட்சுமணர் 

 

மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் !

உண்மையிலேயே கடவுளைக் காண முடியுமா, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால், பதில், ஆம். இருக்கிறார்கள் என்பதுதான். கடவுளைக் கண்டது மட்டுமல்ல; அவ்வாறு கண்டதை அவர்கள் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTwFQy2eNznaQPR85elc5dTodUCSsK5zLaufInczU6D4kzJF3hM5w


 

 Colonel Lionel Blaze (கலோனெல் லையோனெல் ப்ளேஸ்) என்பவர் 1795 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு ஆங்கிலேயே அதிகாரி. இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.

 ஒருநாள் அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும். அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும் படி வேண்டிக் கொண்டனர். அந்த அதிகாரி உடனே மக்களிடம், நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே? என்று கேட்டார்.
 உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார் என்றார் நம்பிக்கையுடன். ம், அதையும் தான் பார்ப்போமே என்று சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி. மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.
நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.


 வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த மழைக்கு நிச்சயம்  இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும் என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.

 அந்த வெளிச்சம் அடங்கும்போது  , ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும் வில்லேந்தியிருந்தார்கள். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி கண்டார். அடுத்தாற்போல் அக்காட்சியைக் கண்ட அந்த ஆங்கிலேய அதிகாரி, தரையில் மண்டியிட்டு விழுந்து ஏதேதோ சொல்லிச் சொல்லி அரற்றினாராம். 

மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார். ஸ்ரீ தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார். நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வெட்டிலும் வெ பதிப்பித்தார். இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம்.
 


அந்த ராமர் கோயிலின் பெயர் 'ஏரி காத்த பெருமாள்'.


 

மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் கைகளைப் பற்றியவாறு, நின்ற திருக்கோலத்தில், கோதண்டராமராகக் காக்ஷி தருகிறார். தர்மத்தைக் காக்க திருஅவதாரம் செய்து தானே மனிதனாக வாழ்ந்த ராமபிரான் சீதா லக்ஷ்மண ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் இருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவி சமேத கருணாகரமூர்த்தியும் இங்கு எழுந்தருளியுள்ளார். கர்ப்பக்ருஹத்திற்குள்ஆஞ்சநேயர் இல்லை என்பது ஆச்சர்யம்.

ஆஞ்சநேயர், கோயிலுக்கு வெளியே புஷ்கரிணியின் கரையில் தனிக்கோயில் கொண்டுள்ளார்.


மனைவியின் கரம் பிடித்த ராமன் : ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி தந்ததாகச் சொல்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஜனக மகராஜாவின் மகளாகவளர்ந்ததால் இவளுக்கு இப்பெயர்.)

தனிச்சன்னிதியில் யந்த்ர சக்கரத்தாழ்வார் காக்ஷி தருகிறார். பின்புறம் யோக நரசிம்ஹர். ஆண்டாள், ராமனுஜருக்குத் தனிச்சன்னிதிகளும் உள்ளன. நவநீதக்கண்ணன் ராமானுஜர் சன்னிதியில் காக்ஷி தருகிறார்.

ஆண்டாள் சந்நிதிக்கு அருகில் உள்ள மகிழமரத்தடியில்தான் ராமாநுஜர் பெரிய நம்பிகளிடம் மந்திர உபதேசம்பெற்றார் என்பதும் அங்கு பொறிக்கப்பட்டு வரைபடமாகவும் உள்ளது.
 
பிரகலாத வரதன் : கம்பராமாயணம் எழுதிய கம்பர், அதை அரங்கேற்றும் முன்பு ராமன் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது, ஓரிடத்தில் சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது. பயந்துபோன கம்பர், அவ்விடத்தைப் பார்த்தபோது நரசிம்மர் லட்சுமியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் சிங்க முகமில்லாமல், மனித முகத்துடன் சாந்த நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டது. உற்சவரான இவரை "பிரகலாத வரதன்' என்கின்றனர். 

ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்: ஸ்ரீரங்கத்தில் சேவை செய்து வந்த ஆளவந்தாரின் சீடர் பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார். இவ்வேளையில் ராமானுஜர் அவரிடம் தீட்சை பெறுவதற்காக ஸ்ரீரங்கம் கிளம்பினார். இருவரும் இத்தலத்தில் சந்தித்துக் கொண்டனர். பெரியநம்பி ராமானுஜருக்கு ஆச்சார்யாராக இருந்து இத்தலத்திலேயே "பஞ்ச சம்ஸ்காரம்' என்னும் தீட்சை செய்து வைத்தார். இந்த வைபவம் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று இக்கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் நடக்கும்.

ராமர் பூஜித்த கருணாகரர்: ராமர் தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் கருணாகரப்பெருமாளே (உற்சவர்) பிரதான மூர்த்தியாக அருளுகிறார். விபண்டகரால் பூஜிக்கப்பட்ட இவரே விழாக் காலங்களில் பிரதானமாக புறப்பாடாகிறார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித் தாயாரையும், போகிப்பொங்கலன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர், சீதையை மீட்க அருள வேண்டி இவரை பூஜித்துச் சென்றார். இதனால் இவருக்கு பிரதான இடம் பெற்றிருக்கிறார். தவிர ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு.

யந்திர சக்கரத்தாழ்வார்: பதினாறு கரங்களுடன் அக்னி கிரீடம் அணிந்த சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யந்திரத்துடன் சுவாமியை தரிசிப்பது நிறைந்த பலன் தரும். இவருக்குப் பின்புறமுள்ள யோக நரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகிறார். சித்திரை நட்சத்திர நாட்களில் இச்சன்னதியில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.

குரு சிஷ்யர் தரிசனம்: ராமானுஜரும், அவருக்கு தீட்சை கொடுத்த பெரியநம்பியும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். ராமானுஜர் தீட்சை பெறும் நிலையில் வணங்கிபடியும், பெரியநம்பி ஞானமுத்திரை காட்டியபடியும் இருக்கின்றனர். இவ்வாறு குரு, சிஷ்யர் இருவரையும் ஒரே சன்னதியில் தரிசிக்கலாம். குழந்தைகள் கல்வியில் சிறப்புப் பெற, இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்தச் சன்னதியில் பெரியநம்பி பூஜித்த குழந்தை கண்ணன் இருக்கிறார். இவர் கையில் வெண்ணெயுடன், வலக்காலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டுகிறார்கள்.

தீட்சை முத்திரைகள் : பெருமாள் பக்தர்களுக்கு தீட்சை தரும்போது, கைகளில் சங்கு, சக்கர முத்திரைகள் பதிப்பர்.

பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு, சக்கர முத்திரைகள் இக்கோயிலில் உள்ளது. 1935ல் கோயில் திருப்பணி நடந்தபோது, இம்முத்திரைகள் இங்கு கிடைத்தது. இந்த சங்கு, சக்கர தரிசனம் கிடைப்பது மிக அபூர்வம்.

சொல்லில் அடங்கா புகழவன். சொல்லின் செல்வன். அஞ்சனைப் புதல்வன். சிவனின் அவதாரன். அவன் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும்.   அவன் புகழ்பாடி வையகமே திரளவேண்டும்.  அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பாணம்.  வானுயர வளர்ந்தாலும் வானரன். தானுயரப் பார்பதில்லை. 'ராம' என்று ஓரு முறை  உரைத்தால் போதும். கூனிக்குறுகி அணுவளவாய் மாறிடுவான்.

 

"பூமியில் மலைகளும் நதிகளும் எது வரை உள்ளதோ அது வரை மக்களிடையே ராமாயணம் நிலைத்து நிற்கும்"
- ராமாயணத்தில் வால்மீகி முனிவர் 1-2-34


ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம்.

அயோத்யா

இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம
நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம்.


வடக்கு ரயில்வேயின் வாரணாசி - லக்னோ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னோவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

பக்ஸர்

சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று வேறு பெயர்களாலும் இது பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது. கிழக்கு ரயில்வேயின் பாட்னா - மொகல்சராய் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.

அகல்யாசிரமம்

கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி-தர்பங்கா ரயில் மார்க்கத்தில் கம்தௌல் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி மேற்கே 15 மைல் தொலைவில் உள்ள அஹியாரி என்ற கிராமத்தை அடைந்து கௌதம குண்ட் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அஹல்யா குண்ட் உள்ளது. இதுவே அஹல்யா சாப விமோசனம் பெற்ற இடம்.

ஜனக்பூர்

மிதிலை அரசர் ஜனகரின் ராஜதானி ஜனக்பூர். இது சீதாமடியிலிருந்து ஜனக்பூர் சாலையைக் அடைந்து அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்தது.

பரத்வாஜ ஆசிரமம்

ஆதிகாலத்தில் அனைவரையும் ஆகர்ஷித்து ஈர்த்த பிரயாகையின் முக்கிய கேந்திரம் பரத்வாஜ ஆசிரமம். பரத்வாஜ மாமுனிவர் தம் சிஷ்யர்களுடன் இருந்த இடம் இது.
ப்ரயாகை தீர்த்தராஜம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது
தீர்த்தங்களிலெல்லாம் சிரேஷ்டமான தீர்த்தம் என்று பொருள். இந்தப் பகுதி இப்போது அலகாபாத் என்று பிரசித்தி பெற்ற இடமாகத் திகழ்கிறது.

வால்மீகி ஆசிரமம்

ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் வாழ்ந்த இடம். ப்ரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடூரில்
கங்கை கரையிலும் சீதாமடி அருகேயும் அவர் வசித்ததாகக் கூறப்படுகிறது.சித்ரகூடம்

ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது. அலகாபாத்- ஜபல்பூர் ரயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் சித்ரகூடம் ரயில்
நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.
 


அனசூயா ஆசிரமம்

ரிஷிபத்தினி அனசூயா வசித்த இடம். சித்ரகூடத்திலிருந்து தெற்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.


சுதீக்ஷ்ண ஆசிரமம்

வீரசிங்கபுரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சரபங்க ஆசிரமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஜைத்வாரா ரயில் நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் வீரசிங்கபுரம் உள்ளது. சரபங்கர் ஆசிரமமும் இந்தப் பகுதியில்தான் உள்ளது.

அகஸ்தியாசிரமம்

குந்தாபூர் - கோகர்ண மார்க்கத்தில் கங்கோலி உள்ளது. கங்கோலியிலிருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைக் காணலாம். இங்கே பல அபூர்வ கோவில்கள் உள்ளன. இங்கேதான் கடல் அருகே அகஸ்திய ஆசிரமம் உள்ளது.

ராம்டேக்

இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள். ராமர், லக்ஷ்மணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது சிறிது காலம் தங்கி இருந்தனர். ஆதலால் இது புண்ய ஸ்தலமாகக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர்-சிவனி-ஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக். நாக்பூரிலிருந்து 46 கிலோமீட்டர் தூரம் தான்!

பஞ்சவடி

ராமாயணத்தில் கோதாவரியை ராமர் அடைந்தது விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பஞ்சவடி மிக முக்கியமான இடம்.இங்கிருந்து 25 கிலோமீட்டர்
தூரத்தில் த்ரயம்பகேஸ்வரத்திலிருந்து கோதாவரி தோன்றுகிறது.
சென்ட்ரல் ரயில்வேயின் மும்பை - புசாவல் தடத்தில் நாசிக் ரோட் ஒரு பெரிய ரயில் நிலையம். இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் பஞ்சவடி உள்ளது.


சபரி ஆசிரமம்

சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்ற புராதன நகரம் ஹம்பி ஆகும். இது 36 கிலோமீட்டர் விஸ்தீர்ணத்தில் பரவிய பெரிய நகரம். நகர மத்தியில் விரூபாட்சர் கோவில் உள்ளது. இங்கே துங்கபத்ரா நதி கோலாகலத்துடன் துள்ளி
வருகிறது. இதை சக்ர தீர்த்தம் என்கின்றனர். இதன் அருகே உள்ள மலையில் ஸ்ரீ ராமர் ஆலயம் இருக்கிறது. இந்த மலை மதங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மதங்க மாமுனிவர் வசித்து வந்தார். இவர் ஆசிரமத்திற்கு அருகேதான்
சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.


கிஷ்கிந்தா

கர்நாடகத்திலிருந்து ஹூப்ளி - கதக் - பெல்லாரி மார்க்கத்தில் ஹான்ஸ்பேட் முக்கிய ரயில் நிலையம் ஆகும். பெல்லாரியிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. ஹூப்ளியிலிருந்து 145 கிலோமீட்டர் தூரத்திலும்
கதக்கிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் ஹம்பி உள்ளது.

ஹான்ஸ்பேட் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பழைய ராஜதானி ஆகும். இதை ஒட்டிய பகுதியே கிஷ்கிந்தா ராஜ்யம் ஆகும். இதை ஆண்டவரே சுக்ரீவ மஹாராஜா. இந்தப் பகுதியில் உள்ள சிவ-விருபாட்சர் கோவில் மிகவும் பிரசித்தமானது.


ருஸ்யமுகம்

கிஷ்கிந்தா ராஜ்யத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அனாகுந்தி என்ற கிராமம் உள்ளது. இதற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் பம்பா சரோவர் உள்ளது. இதைச் சார்ந்த பகுதியே ருஸ்யமுக பர்வதம் ஆகும்.


ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும் சென்னையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ராமசேது

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா ஜெமினி -11 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி ராமேஸ்வரம் -ஸ்ரீலங்கா இடையே அமைந்துள்ள. பாலத்தின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது. ஒப்பற்ற தனித்தன்மையுடைய வளைவுடன் கூடிய மனிதனால் அமைக்கப்பட்ட பாலம் என்று நாஸாவே புகழ்ந்த பாலம்தான் ராம சேது. (நாஸா
எடுத்த இந்தப் படத்தை 1993ம் ஆண்டு டில்லி பிரகதி மைதானில் நடந்த தேசிய விஞ்ஞான மையத்தின் கண்காட்சியில் பிரதானமாக வைத்திருந்தது
குறிப்பிடத்தகுந்தது.)  இதன் மீது நடந்தே ராமர் தன் சைனியத்துடன் இலங்கை சென்றார்.


இலங்கை

குபேரன் வாழ்ந்த எல்லையற்ற செல்வத்துடன் இருந்த நாடு. அவனிடமிருந்து ராவணன் இதை அடைந்து இங்கு வாழ்ந்து வந்தான். பத்துத் தலைகளுடன் கூடிய இவனை வீழ்த்தி சீதா தேவியை அசோகவனத்திலிருந்து ராமர் மீட்டு விபீஷணனை அரசனாக நியமித்து அயோத்தி மீண்டார். ராமாயணம் தென் கிழக்கு ஆசியாவிலும், திபெத்திலும், மலேசியாவிலும்,
ஸ்ரீலங்காவிலும், பிலிப்பைன்ஸிலும், அரேபியா, பல்கேரியா நாடுகளிலும் பரவி உள்ளது. பர்மிய, கம்போடிய, சீன, செக், எகிப்திய, ரஷிய, ஆங்கில மொழிகள் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் ராமாயணம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ராமரின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவர் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச்
சின்னங்களாக பரவி உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றையே மேலே பார்த்தோம். மர்யாதா புருஷோத்தமான ராமன் தன் ஜீவியத்தால் வாழ்க்கை முறையைக்
காண்பித்தான். இது கர்மயோகம். தன் நாமத்தால் உலகைக் காப்பாற்றுகிறான். இது பக்தி யோகம். தனது அகண்டாகார பொருளால் மெய்ப்பொருளை விளக்குகிறான். இது ஞான யோகம்.

ராம நாமம் வெல்க! 

ஆஞ்சநேயரிடம் விண்ணப்பம்

 

அஞ்சனை வயிற்றில் தோன்றிய முத்தே
அகில உலகுக்கும் பக்திக்கு வித்தே
ஸ்ரீராமர் புகழ் உணர்ந்த ஞானி நீயே
என் ராம பக்தி வளர ஏணி நீயே

மலைகளை தூக்கும் ஆற்றல் இருந்தும்
விண்ணை அளக்கும் உருவம் இருந்தும்
ஸ்ரீராமர் முன்னால் நீ குறுகி நிற்கிறாய்
ஸ்ரீராமரின் அன்பால் நீ உருகி நிற்கிறாய்

சொல்லிலும் செயலிலும் உனக்கிணை உண்டோ
ஆகாயத்தை விடவும் அகன்றது உண்டோ
உன் புகழ் யாவும் ஸ்ரீராமர் புகழ் அன்றோ
மரத்தின் புகழ் அதன் வேருக்கு அன்றோ

அன்பர்க்கு அன்பன் அடியோர்க்கு அடியன்
பளிங்கு மனத்தில் துளி மாசற்ற எளியன்
நினைத்தாலே தித்திக்கும் திகட்டாத இனியன்
கருணை மணம்பரப்பும் செந்தாமரை விழியன்

ஸ்ரீராமரெனும் பெயர் கொண்ட ஆனந்த ஊற்று
அத்தங்கக் தலைவருக்கு இங்குண்டோ மாற்று
நம் தலைவர் புகழை இவ்வுலகெங்கும் பரப்பிட
அவர் பண்பின் சிறப்புகளை மக்கள் மனதில் நிரப்பிட

எனையும் உனைப்போல் நல்பக்தனாய் மாற்றிடு
ராமபக்தியெனும் நல்லமுதை என் இதயத்தில் ஊற்றிடு
அஞ்ஞானங்கள் அகற்றி எனை ஞானியாய் தேற்றிடு
ராமர் புகழ் பரப்புவதில் உன் இளையவனாய் ஏற்றிடு

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்

 

ராம நாமத்தின் மகிமை !

 

 

 

பகவானை விடப் பகவான் நாமத்திற்கு சிறப்பு அதிகம் என்று சொல்லுவார்கள். இதற்கு ஒரு கதை சொல்வதுண்டு.

காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல். ஆனால் பூர்வ ஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய்
பற்றிக்கொண்டது.  வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள்
பெற்ற பலரும் முன்வந்தனர். அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத் தொடங்கின.
தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.  தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத்
தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார்.  தான் கங்கையில் ழூழ்கி இறந்துவிடப்போகவதாகவும் தன் மேல்
உண்மையான அக்கறை இருந்தால் ஒரு கல்லை அவர் உடலில் கட்டும் படியும் வேண்டினார். அவர் மேலும் மேலும் வற்புறுத்தவே
அவருடைய இடுப்பில் ஒரு கல் கட்டப்பட்டது. அவரைச் சுற்றி நின்றவர்கள் அழுதுகொண்டிருந்தனர். அந்நேரம் அங்கே கபீர்தாசைன்
சீடர் பத்;மநாபர் என்னும் பெயருடையவர் வந்தார். அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார்
நடப்பதை அறிந்ததும் அங்கிருந்தவர்களிடம் 'நான் சொல்கிறப்டி நீங்கள் செய்தால் அவரைக் காப்பாற்றிவிடலாம்.
செய்வீர்களா?''என்று கேட்டார்.

'எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுக்கிறோம் ' என்றனர் சிலர்.

'ஒரு உயிரைக் காப்பாற்ற வேறு உயிர்கள் தேவையில்லை. நீங்கள் எல்லோரும் ஒரே மனத்துடன் நான் சொல்லுவதை ழூன்று முறை திருப்பிச்
சொல்லவேண்டும்' என்றார்.

'சரி' என்றார்கள்

உடனே அவர் எல்லோரையும் எழுந்து நின்று கைகூப்பிக்கொண்டு ழூன்று முறை ராம நாமத்தைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.

'ஏற்கனவே இராமர் கோவிலுக்குச் சென்று பிரார்த்திதோம்.  ஏதும் நடக்கவில்லை' என்றார்கள்.

'ராமனைத் தொழுது நடக்கவில்லையென்றால் இராம நாமத்தால் நடக்கும்.

முயன்று பாருங்களேன்' என்றார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரே சிந்தையோடு ழூன்று முறை இராமநாமத்தைக் கூறினர். செல்வந்தர் இடுப்பில் கட்டிய கல் அறுந்துவிழுந்தது.
அவரது நோய் நீங்கப்பெற்று புலிப்பொலிவுடன் விளங்கினார். எல்லோரும் பத்மநாபரைப் போற்றினர். எல்லாம் குருவருள் என்றார் அவர்.
எல்லோரையும் அழைத்துக்கொண்டு கபீர்தாஸரிடம் சென்றார்.  எல்லாவற்றையும் கேட்ட கபீர்தாசர் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம்
கொண்டார். பத்மநாபரைப் பார்த்து.

'நீ என்னிடம் கற்றுக்கொண்டது இவ்வளவு தானா? இராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே! அவர் குணமாகியிருப்பாரே!. அதன்
திறமையை அறியாமல் ழூன்று முறை சொல்லச் செய்து இராமநாமத்தின் பெருமையை குறைவாக மதிப்பிட்டுவிட்டாயே' என்றார் கபீர்தாசர்
.

 

'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
'ராம' என்றிரண்டெழுத்தினால்'


நல்லன எல்லாம் தரும் 'ராம' நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!


 

 

Easiet way to put counter on site
No of Visitors

 

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும் 
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை 
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே..

 

ரகுபதி ராகவ ராஜாராம்


ரகுபதி ராகவ ராஜாராம் !  பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் ! பதீத பாவன சீதாராம் !
ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

ஜெய ஜெய ராம் ! கோவிந்த ஹரி ஹரி !
ஜெய ஜெய ராம் !
முகுந்த ஹரி ஹரி !
கோவிந்த ஹரி ஹரி ! முகுந்த ஹரி ஹரி !

 

 

ராமன் எத்தனை ராமனடி

 

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!

 

சுகப்பிரசவம் உண்டாக


சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும், விண்ணோர்களும்
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்புற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே 
ஒரு பகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து 
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை

 

கர்ப்பிணிப் பெண்கள் இந்த பாடலை கூறினாலும், பிறர் கூறக் கேட்டாலும் 
நிச்சயம் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு

 

 

 

ராமா ராமா ராமா என்று நாமம்


ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடனும்
நாமம் சொல்லி பாடனும்- நாவிலே
வராது போனால் நல்லவரோடு சேரனும்.

எண்ணி எண்ணி பார்க்கனும் 
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும். 

விட்டல், விட்டல், விட்டல் என்று கையைத் தட்டி பாடனும் 
கையைத் தட்டி பாடனும்- கையை
தட்ட வராவிட்டால் கூட்டத்தோடு சேரனும்

எண்ணி எண்ணி பார்க்கனும் 
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும். 

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை செய்து பாடனும்
பஜனை செய்து பாடனும் - பஜனை
செய்ய வராவிட்டால் பக்தரோடு சேரனும்.

எண்ணி எண்ணி பார்க்கனும் 
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும். (ராமா)

ஸ்ரீ ராமனின் புகழ் பாடுவோம்
எங்கள் அனுமனின் அருள் வேண்டுவோம்

ராம ராம ஜெய ராம்
ஸ்ரீ ராம ராம ஜெயராம்

ராம ராம ஜெய ராம்
ஸ்ரீ ராம ராம ஜெயராம்

ராம ராம ஜெய ராம்
ஸ்ரீ ராம ராம ஜெயராம்

 

 

பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்

 

11ம் நூற்றாண்டில் சோளர்களால் வணங்கப்பட்ட ஆஞ்சயேர்

 

 

 

ware

 RAMAYANAM IN ENGLISH (CARTOON FULL MOVIE)

 

 

முதன் முதலில் ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ லக்ஷ்மணரையும் ஆஞ்சநேயர் மாறுவேடத்தில் சந்திக்கின்ற காட்சி

 

அன்னை சீதையை மீட்பதற்காக ஸ்ரீ ராம நாமம் எழுதி பாலம் கட்டும் அனுமன்.

 

ஸ்ரீ லக்ஷ்மணனை காக்க அனுமன் சுமந்து வந்த சஞ்சீவி மலை இன்றும் இலங்கையில் இருக்கின்றது.

 

அன்னை சீதையை இராவணன் சிறை வைத்திருந்த அசோகவனத்தின் ஒரு பகுதி.

 

ராமர் பாலம் - சிலவருடங்களுக்கு முன் அமெரிக்க நாசா நிறுவனத்தினால் எடுக்கப்பட்ட படம்.

 

ஸ்ரீ ராமர் பாதம்

 

ஸ்ரீ ராமர் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிதக்கும் கல்

 

 

 

என்றும் சிரஞ்சீவியான ஆஞ்சநேயப் பெருமானின் இன்றய தோற்றம் சில வருடங்ளுக்கு முன் இமய மலைச்சாரலில் எடுக்கப்பட்ட படம்.

 

ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின்

 

64வது ஜென்ம தினம் 8/4/2012 

 

ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

 

ஸ்ரீ மத் சந்திரசேகர சுவாமிகள்  

 

கொழும்பு தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் லண்டன் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயத்தின்  ஸ்தாபகர் ஸ்ரீ மத் சந்திரசேகர சுவாமிகளின் 64வது       ஜென்மதினமான 08.04.2012 ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொண்டாடப்பட்டது.

 

31-03-2012

ஸ்ரீ ராம நவமி

 

 

ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.

 

 

 17.05.2012 குரு மாற்றம் 

 

 (மேலும் படிக்க....)